ஷங்கர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற இயக்குனர் ஆவார். இவர் எஸ் பிச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ஷாங்கரின் படங்கள் தொழில்நுட்பத்தில் மிரட்டும் வகையிலும் பிரம்மாண்டம் நிறைந்ததாகவும் சமூகநீதி கருத்துக்களை கொண்டதாகவும் இருக்கும். அதனால் இவரை பிரம்மாண்ட இயக்குனர் ஷாங்கர் என்றும் கூறுவர். 1993 ஆம் ஆண்டு “ஜென்டில்மேன்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் ஷங்கர். முதல் படமே அவருக்கு பாராட்டுகளை பெற்று தந்தது. தொடர்ந்து காதலன், 1996 ஆம் ஆண்டு இந்தியன், 1998 இல் ஜீன்ஸ், 1999 ஆம் ஆண்டு முதல்வர் என பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் ஷங்கர்.
2000 காலகட்டத்திற்கு பிறகு அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, எந்திரன் 2.0 என இவரது படங்கள் பெரும்பளவு மக்களுடைய நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்ற படமாகவே இருக்கும். இயக்குனராக மட்டுமல்லாமல் ஷங்கர் தயாரிப்பாளராக கல்லூரி, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, வெயில், ஈரம் போன்ற திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார். ஷாங்கர் படங்கள் என்றாலே வெற்றி படங்கள் தான் என்று கூறிவந்த நிலையில் சமீபத்தில் இந்தியன் 2 வெளியாகி தோல்வி அடைந்தது என்று சொல்லலாம்.
இருந்தாலும் அடுத்ததாக இந்தியன் 3, ராம் சரணை வைத்து Game Changer ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார் ஷங்கர். இதில் கேம் சேஞ்சர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்த படத்தை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்தை இயக்குவதற்காக இயக்குனர் ஷங்கர் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்திற்காக இயக்குனர் ஷங்கர் 50 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்தியன் 2 படத்திற்கும் இதே சம்பளம் தான் வாங்கியதாக கூறப்படுகிறது.