Categories: சினிமா

கடைசி காலத்துல சோறு போட்ட பிரபலம்.. இறந்த பிறகு நிறைவேற்றப்பட்ட சந்திரபாபுவின் கடைசி ஆசை..!

Spread the love

தமிழ் சினிமாவில் பலம்பெரும் நடிகராக இருந்தவர் தான் டி.ஆர். மகாலிங்கம். பல வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ள இவரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் தான் சந்திரபாபு. பாடல் பாடுவதில் அதிக ஆர்வம் கொண்ட சந்திரபாபுவுக்கு டி ஆர் மகாலிங்கம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். 1947 ஆம் ஆண்டு வெளியான தனா அமராவதி என்ற திரைப்படம் மூலமாக சந்திரபாபு தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிறகு மோகனசுந்தரம் என்ற திரைப்படத்தில் நடித்தார். டி ஆர் மகாலிங்கம் தயாரிப்பு இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான சின்னதுரை திரைப்படத்தில் சந்திரபாபு ஒரு பாடலை பாடியிருந்தார்.

இந்தியாவிலேயே முதல்முறையாக யூட்லிங் பாடலை பாடியதும் ஆங்கில பாடலை பாடியதும் நடிகர் சந்திரபாபு தான். அதனைப் போலவே முதல் வெஸ்டர்ன் பாடல்களையும் அவர்தான் பாடினார். இப்படி பல திறமைகளை கொண்டிருந்த சந்திரபாபு பல திரைப்படங்களுக்கு கதையும் எழுதியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்த சந்திரபாபு தனது கடைசி காலத்தில் உதவிக்கு யாரும் இல்லாமல் ஒரு சிறிய அறையில் தங்கி இருந்துள்ளார்.

கீழே மாட்டு கொட்டகை மேலே ஒரு சிறிய கட்டிலில் நாள் முழுவதும் படைத்திருந்த சந்திரபாபுவுக்கு எம் எஸ் வி, ஆர் எஸ் மனோகர் மற்றும் தேங்காய் சீனிவாசன் ஆகிய மூவரும் தான் தங்களுடைய வீட்டில் இருந்து தினமும் சாப்பாடு கொடுத்து உதவியுள்ளனர். தினமும் மூன்று வேளையும் எம்.எஸ்.வி வீட்டில் இருந்து தான் யாராவது ஒருவர் தவறாமல் சாப்பாடு கொண்டு வருவார். என்ன வேண்டுமோ அவனுக்கு செய்து கொடுங்கள் சாப்பாடு செல்வது எக்காரணத்தை கொண்டும் நின்றுவிடக் கூடாது என்று எம் எஸ் வி தனது குடும்பத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதனைப் போல ஆர் எஸ் மனோகர் மற்றும் தேங்காய் சீனிவாசன் ஆகிய இருவரும் சந்திரபாபுவுக்கு மதுபானம் அனுப்பினாலும் எம் எஸ் வி கடைசி வரை அவருக்கு அதை கொடுக்காமல் இருந்துள்ளார். எம் எஸ் வி வீட்டு சமையலறை வரை சென்று அவருடைய அம்மாவிடம் எனக்கு ஏதாவது சமைத்துக் கொடுங்கள் என்று கேட்கும் அளவுக்கு சந்திரபாபு நெருங்கிய நட்புடன் இருந்துள்ளார். அப்படி இருந்த சந்திரபாபு இறந்த பிறகு அவருடைய உடலை எம்.எஸ்.வி வீட்டு வாசலில் சில நிமிடங்கள் வைத்துவிட்டு அதன் பிறகு தான் எடுத்துச் சென்றுள்ளனர். இதுதான் சந்திரபாபுவின் கடைசி ஆசை எனவும் கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

பள்ளி செல்ல தயாராக இருந்த 6 வயது மகன்… மாமியாருடன் ஏற்பட்ட சண்டையில்.. தாயே கொலை செய்த கொடூரம்.. உ.பியில் பயங்கரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…

5 மணத்தியாலங்கள் ago

பெங்களூருவில் அதிர்ச்சி: ஏசி (AC) ஆன் செய்யச் சொன்ன பெண் பயணிக்குக் கொலை மிரட்டல் விடுத்த கேப் டிரைவர்..!!

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…

5 மணத்தியாலங்கள் ago

கல்யாணம் பண்ணிக்கோ.. இல்லனா வீட்டை விட்டு போ..! 25 வயசானாலே கல்யாணம் தானா..? 25 வயதுப் பெண்ணின் குமுறல்: இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…

5 மணத்தியாலங்கள் ago

“டேய் என்னடா இப்படி பண்ணிட்டியே” 12 வயது மகனை ஆபீஸுக்கு கூட்டிப்போன தந்தை… கொஞ்ச நேரத்தில் அலுவலகமே எரிந்து சாம்பல்..!!

சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…

5 மணத்தியாலங்கள் ago

“ஒரு சின்ன ஓட்டைக்கு 21 ஆயிரம் ரூபாயா?” பிளம்பர் கூலியைக் கேட்டு அலறிய இந்தியப் பெண்.. அமெரிக்காவில் இந்தியப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…

6 மணத்தியாலங்கள் ago

மகளிருக்கு குட் நியூஸ்.. ரூ.1000 வழக்கம்போல கிடைக்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…

6 மணத்தியாலங்கள் ago