தமிழக சட்டசபை தேர்தல் 2026 இல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் களம் தற்போதையிலிருந்து சூடு பிடிக்க விட்டது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, TVK உட்பட பல கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது. இந்த நிலையில் நான்கு முனை போட்டி தமிழகத்தில் நிலவ உள்ளது. அதாவது திமுக தலைமையில் ஒரு அணி, அதிமுக பாஜக கூட்டணியில் ஒரு அணி, நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை களம் காண்கிறது.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “திமுகவில் இளைஞர் அணி, விவசாய அணி என மொத்தம் 25 அணிகள் உள்ளன. அதிமுகவில் பழனிச்சாமி, பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் அணி என 48 அணிகள் இருக்கிறது. அதிமுக என்ன செய்ய வேண்டும் என்பதை டில்லி தான் முடிவு எடுக்கிறது. டெல்லி என்ன முடிவெடுக்க வேண்டும் என்பேதை முதல்வர் ஸ்டாலின் நிர்ணயம் செய்கிறார். பச்சை பேருந்தில் செல்லும் பழனிச்சாமி ஆம்புலன்ஸை பார்த்தாலே கோபமடைகிறார். ஒட்டு மொத்த அதிமுகவும் ஆம்புலன்ஸில் ஏற்று விடப்படும்” என்று கூறியுள்ளார்.
