தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தன்னை துணை முதல்வர் ஆக்குவது தொடர்பாக எழுந்த விவாதங்கள் குறித்து மனம் திறந்துள்ளார். தற்போதைக்கு யாருக்கும் துணை முதல்வர் பதவி வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என்று தமிழக முதல்வர் விஜய் தொலைபேசி வாயிலாகத் தன்னிடம் நேரடியாகக் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்குத் தானும் அத்தகைய பதவியை எதிர்பார்க்கவில்லை என்பதை தெளிவுபடுத்தியதாகக் கூறிய திருமாவளவன், எனினும் அமைச்சரவையில் தங்களுக்கு இடம் தருவதாக முதல்வர் உறுதியளித்ததைச் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், இந்த உரையாடலுக்குப் பின்னர் விசிகவின் ஆதவ் அர்ஜுனாவைத் தொடர்புகொண்டு, தனக்கு தற்போதைக்கு எந்தவிதமான பதவியும் தேவையில்லை என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாகவும் அந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
திருப்பூர் ஊத்துக்குளி சாலை, கருமாரபாளையம் அருகேயுள்ள மூகாம்பிகை நகர் பகுதியில், காதலித்து கரம் பிடித்த மனைவியை கணவனே அடித்துக் கொலை…
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்துள்ள கோர பேருந்து விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற பயணிகள்…
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூர் காவிரி ஆற்றில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாக்கு மூட்டை ஒன்று…
பெங்களூரில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் நடந்த மாபெரும் அத்துமீறல்களும், அங்கிருந்த பெண்களின் கொடூரமான சித்திரவதைகளும் தற்போது வெளிச்சத்திற்கு வந்து…
முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்…
அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் மனைவி உஷா வான்ஸ் நடத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிரம்ப், பலரும்…