டிமான்டி காலனி – 2 முதல் பாகத்துடன் கனெக்ஷன் இருக்கா…? முழு விமர்சனம் இதோ…

Spread the love

டிமான்டி காலனி அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனந்த், அபிஷேக், ஜோசப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து 2015 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திகில் திரைப்படமாகும். இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று அருள்நிதி கேரியரில் முக்கிய இடத்தை பிடித்தது.

அந்த திரைப்படம் வெளியான சமயத்திலேயே இரண்டாம் பாகம் வந்தால் நல்லா இருக்கும் என்று மக்கள் விரும்பினார்கள். அஜய் ஞானமுத்துவும் இரண்டாம் பாகம் தயாராகிக் கொண்டிருக்கிறது என்று கூறியிருந்தார். அதன்படி இன்றைக்கு டிமான்டி காலனி 2 வெளியாகி இருக்கிறது. படம் எப்படி இருக்கிறது? முதல் பாகத்துடன் கனெக்ட் ஆகி வருகிறதா என்பதை இனி பார்ப்போம்.

டிமான்டி காலனி 2 சூப்பர் நேச்சுரல் திகில் திரைப்படமாக வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர், அர்ச்சனா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன் போன்றவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். கடந்த வருடம் செப்டம்பர் மாதமே வெளியாக திட்டமிட்டப்பட்ட டிமான்டி காலனி 2 திரைப்படம் சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு தற்போது இன்று ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகியிருக்கிறது. அஜய் ஞானமுத்து படத்தை இயக்கி உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு இருந்து வந்தது. வழக்கமாக இரண்டாம் பாகத்தில் புது கதைக்களத்தை முக்கியமாக பேய் படங்களில் தேர்ந்தெடுப்பார்கள். பழிவாங்கும் படலம் மட்டும் அதேபோல் இருக்கும்.

ஆனால் டிமான்டி காலனி 2 படத்தில் முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இரண்டாம் பாகம் அமைந்துள்ளது. முதல் பாகத்தில் கதாநாயகன் ஸ்ரீனிவாசன் இறப்பது போல் காண்பிக்கப்பட்டு இருக்கும். ஆனால் இரண்டாம் பாகத்தில் ஸ்ரீனிவாசன் இறக்காமல் உயிரோடு இருப்பதே ஓப்பனிங்காக ஆரம்பித்து இருக்கிறார்கள்.

அந்த ஸ்ரீனிவாசனை யார் காப்பாற்றினார்கள்? எதற்காக காப்பாற்றினார்கள் அவனுடைய நோக்கம் என்ன என்பதை இரண்டாம் பாகம் விரிவாக காட்டி இருக்கிறது. படம் பல்வேறு சஸ்பென்ஸ்களுடன் கொண்டு நகர்கிறது. 15 நூற்றாண்டில் நடந்த பிரச்சனையை தொடர்ந்து தான் தற்போது பிரச்சினைகள் பல நடக்கிறது என்பதை வெவ்வேறு ஆண்டுகளில் முதல் பாகத்தையும் இரண்டாம் பாகத்தையும் ஒன்று சேர்க்க முண்ணும் பின்னுமாக காலம் கடந்து கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. எல்லாரும் ரசிக்கும்படியாக சஸ்பென்ஸ் திரில்லர் ஆகவும் இந்த படம் இருப்பதாக மக்கள் ரிவ்யூ கொடுத்துள்ளனர்.

அருள்நிதி நடிப்பு சிறப்பாக நடித்திருக்கிறார். பிரியா பவானி சங்கர் வழக்கம் போல தனது எதார்த்தமான நடிப்பை காட்டியிருக்கிறார். தான் சொல்ல வந்த கதையை தெளிவாகவும் சஸ்பென்ஸ் ஆகவும் சொல்லுவதில் இயக்குனர் அஜய் ஞானமுத்து வெற்றி கண்டுள்ளார். படத்தொகுப்பாளர் குமரேஷ் ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் இசையமைப்பாளர் சாம்சியஸ் ஆகியோரது பங்களிப்பு படத்திற்கு மிகுந்த பலமாக அமைந்துள்ளது.

படத்தின் மைனஸ் என்று மக்கள் சொல்வது எதுவென்றால் வி எஃப் எக்ஸ் காட்சிகள் சரியில்லை என்று கூறியுள்ளனர். முதல் பாகத்தை போல் இந்த பாகத்திலும் பல்வேறு கேள்விகள் பார்வையாளர்களுக்கு வந்துள்ளது அதற்கான பதில் அடுத்த பாகத்திற்கு கிடைக்கும் என்று அடுத்த பாகத்திற்கான லீடை கொடுத்துவிட்டு கிளைமாக்ஸை முடித்திருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. படத்தில் சஸ்பென்சுடன் திகில் அனுபவத்தை வழங்கியுள்ளார் என்று டிமான்டி காலனி 2 படத்திற்கு மக்கள் ஓரளவு பாசிட்டிவ் ரிவியூகளை கொடுத்துள்ளனர்.

admin

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

9 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

9 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

9 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

10 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

10 மணத்தியாலங்கள் ago