“திரையில் விஜய்…” சமூகத்தில் நீங்கதான் நாயகன்… எம்.எல்.ஏ-வின் மாஸ் பிளான்… ‘ஜனநாயகன்’ படத்தோடு சேர்ந்து வந்த புது புரட்சி… தியேட்டரில் கொண்டாட ரெடி ஆகும் ரசிகர்கள்…!

By Visaka on ஆடி 22, 2026

Spread the love

நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியாகவுள்ள “ஜனநாயகன்” திரைப்படத்தின் கொண்டாட்டங்களைச் சமூகப் பொறுப்புணர்வுடன் இணைக்கும் வகையில், கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் “ஜனநாயகன் பாஸ்போர்ட்” என்ற சிறப்பு மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். “ஜனநாயகனைக் கொண்டாடுவோம்… பொறுப்புள்ள நாயகனாக மாறுவோம்!” என்ற எழுச்சிமிக்க முழக்கத்துடன் இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தை வெறும் பொழுதுபோக்காக மட்டும் அணுகாமல், சமூகத்தில் ஒவ்வொரு குடிமகனும் தனது ஜனநாயக கடமைகளையும் பொறுப்புகளையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த “ஜனநாயகன் பாஸ்போர்ட்” முன்னெடுப்பின் மூலம் சாலை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மையைப் பேணுதல், மனிதநேயம், சட்டங்களை மதித்தல் மற்றும் பொது இடங்களைப் பாதுகாத்தல் போன்ற முக்கியமான நற்பண்புகளைப் பின்பற்றுமாறு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். “திரையில் ஜனநாயகன்… சமூகத்தில் பொறுப்புள்ள நாயகன்” என்ற சிந்தனையை மக்களிடையே கொண்டு சேர்ப்பதே இதன் முக்கிய இலக்காகும். ரசிகர்களும் பொதுமக்களும் பெரும் உற்சாகத்துடன் பங்கேற்ற இந்நிகழ்ச்சி, திரைப்படக் கொண்டாட்டங்களைச் சமூக மாற்றத்திற்கான காரணியாக மாற்றும் ஒரு புதுமையான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.