அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை குதிரைபேரம் நடத்தி ராஜினாமா செய்ய வைத்ததாகக் கூறி, தமிழக முதலமைச்சர் விஜய்யை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என அதிமுகவினர் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவிட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த இன்புதுரை எம்பி ஏற்கனவே ஆளுநர் அர்லேக்கரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழ்நிலையில், மதிமுகவைச் சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யும்படி முதலமைச்சர் விஜய் கூறியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியுள்ளார். வைகோவின் இந்த பேச்சினை முக்கிய ஆதாரமாக எடுத்துக்கொண்டு, ஆளுநர் உடனடியாக முதலமைச்சர் விஜய்யைக் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என அதிமுகவினர் சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பதிவிட்டு வலியுறுத்தி வருகின்றனர்.
