காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த திருப்பிலிவனம் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவருடைய மனைவி மதுமதி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று மதியம் சுமார் இரண்டு மணி அளவில் அவருக்கு திடீரென்று பிரசவ வலி வந்துள்ளது. உடனடியாக உறவினர்கள் 108 அவசர உறுதிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் மதுமதியை ஏற்றுக்கொண்டு உறவினர்களுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்றது. வாகனம் ஆர்ப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது மதுமதிக்கு பிரசவ வலி அதிகமானது.
இதனைப் பார்த்து ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர் குணசீலன் உடனடியாக ஓட்டுனரிடம் வண்டியை சாலை ஓரமாக நிறுத்த கூறினார். ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்ட சிறிது நேரத்தில் மருத்துவ உதவியாளர் குணசீலன் துரிதமாக செயல்பட்டு அவரே பிரசவம் பார்த்த நிலையில் மதுமதிக்கு அழகான பெண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது. ஆம்புலன்ஸிலேயே பிரசவம் நடந்ததை கண்ட உறவினர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தாயும் சேயும் பத்திரமாக காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் குணசீலன் மற்றும் ஓட்டுநருக்கு நன்றி தெரிவித்தனர். பிரசவம் முடிந்ததும் குழந்தைக்கும் தாய்க்கும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதல் உதவி அளித்தனர். இருவரும் தற்போது மருத்துவமனையில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து மருத்துவ உதவியாளர் குணசீலனுக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…