“ஹோட்டலுக்குள் 30 மணி நேரம்” ரத்தத்தால் எழுதப்பட்ட தலையணைகள்… ரூமை சுத்தம் செய்ய சென்ற பெண்… போலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

By Divyamayakannan on ஆவணி 26, 2025

Spread the love

சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் டெலிவரி ஊழியராக பணிபுரியும் ஜான் என்ற மாணவர். ஆகஸ்ட் 12ஆம் தேதி டெலிவரிக்காக செல்லும் வழியில் வெள்ளை நிற தலையணையில் 110 மற்றும் 625 என்று இரத்தத்தில் எழுதியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 110 என்பது சீனாவில் அவசரசேவை எண். அதனால் ஜாங் போலீசாரை தொடர்பு கொண்டு வரவழைத்து உள்ளார். விரைந்து வந்த போலீசார் வெள்ளை நிற தலையணை ஓட்டல் அறைகளுக்கு சொந்தமானதுஎன்று சுதாரித்துக்கொண்டனர்.

பின்பு போலீசார் 625 என்ற அறைக்குச் சென்று கதவைத் தட்டினர் இருப்பினும் எந்த ஒரு பதிலும் வரவில்லை. அதனால் போலீசார் கதவை உடைத்துக் கொண்டே உள்ளே சென்றனர். ஓட்டல் உரிமையாளரான ஷோ அங்குள்ள படுக்கை அறையில் சிக்கிக் கொண்டிருந்தார். ஹோட்டல் அறையை சுத்தம் படுத்துவதற்காக சென்றபோது எதிர்பாராத விதமாக கதவு மூடிவிட்டது. கதவை திறக்க முடியாததால் கிட்டத்தட்ட 30 மணி நேரமாக எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் தவித்துள்ளார்.

   

அவருடைய ஆடைகளை வெளியே தூக்கி எறிந்து உதவி கேட்டுள்ளார். ஆனால் பயன் அளிக்காததால் கைவிரலை கடித்து இரத்தத்தால் தலையணையில் எழுதி வீசி உள்ளார். டெலிவரி மாணவன் ஜாங் கண்ணில் தலையணை பட்டதால் அதிர்ஷ்டவசமாக ஷோவின் உயிர் காப்பாற்றப்பட்டது. உயிரைக் காப்பாற்றியதற்காக ஷோ ஜாங்கிற்கு 1000 யுவான் வழங்கினார், இருப்பினும் ஜாங்க் அதை மறுத்துவிட்டார். ஜாங்கின் இச்செயல் சீனாவின் சமூக ஊடகங்களில் பரவி அனைவரும் பாராட்டி வருகின்றனர்.