டெல்லியைச் சேர்ந்த 27 வயது மென்பொருள் பொறியாளர் பி. ராதா காயத்ரி என்பவர், தனது கணவருடன் முசூரிக்குச் சுற்றுலா சென்றிருந்த போது அங்குள்ள ஒரு ஹோம்ஸ்டே அறையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அண்மையில் திருமணமான இந்தத் தம்பதியினர், டெல்லியிலிருந்து ரிஷிகேஷ் வழியாக ஜூன் 14 அன்று இரவு முசூரி-தனௌல்டி சாலையில் உள்ள ஹோம்ஸ்டேவிற்கு வந்து தங்கியுள்ளனர்.
திங்கட்கிழமை அதிகாலை மாலையில் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காயத்ரியின் கணவர் சௌம்யா ஸ்ரீசரன் போலீசாரிடம் கூறும்போது, “இரவில் இருவரும் மது அருந்திவிட்டு அதிகாலை 3:30 மணியளவில் தூங்கச் சென்றோம். காலையில் எழுந்து பார்த்தபோது மனைவி மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் மயங்கிக் கிடந்தார்” எனத் தெரிவித்துள்ளார். அவசர மருத்துவக் குழுவினர் அங்கு வந்து பரிசோதித்தபோது, காயத்ரி ஏற்கனவே இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும், காயத்ரியின் உடல் ஆடைகளின்றி தரையில் கிடந்ததும், படுக்கை விரிப்பில் ரத்தக் கறைகள் இருந்ததும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அறையிலிருந்து இரண்டு காலி மது பாட்டில்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். காயத்ரியின் உடலில் வெளிப்படையான காயங்கள் எதுவும் இல்லை என்றும், அவர் குறைந்த ரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். எனினும், மரணத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய தடயவியல் சோதனைகளும், வீடியோ பதிவுடன் கூடிய பிரேதப் பரிசோதனையும் நடத்தப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பரபரப்பாக வாகனங்கள் சென்று கொண்டிருந்த சாலையின் நடுவே, திடீரெனப் பூனை ஒன்று வழிதவறி வந்து சிக்கிக் கொண்டது. வேகமாக வரும்…
லோனி பார்டர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்திராபுரி காலனி பகுதியில், சனிக்கிழமை நள்ளிரவில் வீட்டின் வெளிப்புறம் சிறுநீர் கழிப்பது தொடர்பாக…
உத்தராகண்ட் மாநிலத்தின் பித்தோராகர் மாவட்டத்தில் நடந்த ஜூல்ஜிபி கண்காட்சி விழாவில், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தனது உரையை நிறைவு…
சென்னை மணலி சி.பி.சி.எல். நகர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாகக் குழந்தையுடன் அறைக்குள் வைத்துப் பூட்டப்பட்ட இளம்பெண்ணைப் போலீசார் பத்திரமாக…
திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு அரசு தாலுகா மருத்துவமனையில் பணியாற்றி வந்த பயிற்சி பெண் மருத்துவர் ஒருவருக்கு மூத்த டாக்டர்…
ஹைதராபாத் கே.பி.எச்.பி பகுதியில் தங்கள் குழந்தையைக் கொன்றுவிட்டுப் பெற்றோரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தங்களுக்குள் இருந்த…