” 22 அரசு விடுமுறைகளுடன் மொத்தம் 155 நாட்கள் லீவு: இந்த ஆண்டு பள்ளிகளில் 210 நாள் தான் கிளாஸ்… பள்ளி மாணவர்களுக்கு கல்வித்துறை கொடுத்த மெகா ஜாக்பாட்…!”

Spread the love

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள 2026-27-ம் கல்வியாண்டிற்கான அதிகாரப்பூர்வ நாட்காட்டியின்படி, நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகளுக்கு மொத்தம் 210 வேலை நாட்களும், 155 விடுமுறை நாட்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் நலன் மற்றும் பாடத்திட்டங்களை திட்டமிட்டபடி முடிக்க இந்த அட்டவணை வகுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும், ஜூலை 19, செப்டம்பர் 19 மற்றும் டிசம்பர் 19 ஆகிய 3 சனிக்கிழமைகள் மட்டும் வேலை நாட்களாகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கல்வியாண்டின் முக்கிய தேர்வுகளான காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 17 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன; அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை 9 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்படும். அதேபோல, அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 16 முதல் 23 வரை நடத்தப்பட்டு, டிசம்பர் 24 முதல் 11 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, புத்தாண்டு முடிந்து ஜனவரி 4-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை மற்றும் பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகள் வார இறுதியோடு இணைந்து வருவதால், இந்த ஆண்டு மாணவர்களுக்கு 3 முதல் 4 நாட்கள் வரை தொடர் விடுமுறைகள் பலமுறை கிடைக்கின்றன.

இந்த கல்வி ஆண்டிற்கான இறுதி வேலை நாள் 2027 ஏப்ரல் 23-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து, மாணவர்களுக்கான கோடை விடுமுறை 2027 ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசுப் பொதுத்தேர்வுகள் மற்றும் இதர வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் பின்னர் தனியாக அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது.

Swetha

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

4 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

4 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

5 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

5 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

6 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

6 மணத்தியாலங்கள் ago