தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்கு நிகரான அளவில் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகர்கள் வெகு சிலர்தான். அவர்களின் ஒருவர் டெல்லி கணேஷ். இவர் தவிர்க்க முடியாத நடிகர். வில்லன், காமெடியன், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அற்புதமாக நடிக்க கூடியவர். இவர் பாலச்சந்திரன் பட்டறையிலிருந்து வந்தவர் .ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் என அனைத்து நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அனைவரோடும் அசத்தலாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர்.

இவர் 1979 ஆம் வருடம் துறை இயக்கத்தில் வெளியான பசி என்ற படத்தில் முனியாண்டி என்ற ரிக்ஷா டிரைவராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் .அதற்காக அவருக்கு மாநில அரசின் சிறந்த நடிகர் விருது கிடைத்தது. சமீபத்தில் கூட ஒருசில படங்களில் நடித்து வந்தார்.இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக திடீரென்று காலமானார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
)
திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தார்கள். இரவு தூக்கத்திலேயே உயிரிழந்து விட்டதாக அவருடைய மகன் தெரிவித்தார். இந்நிலையில் இவர் குறித்த விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் சமீப காலமாகவே இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தவகையில் பிரொடியூசர் முக்தா ரவி டெல்லி கணேஷ் குறித்து பேசுகையில், நாயகன் படத்தில் முதலில் டெல்லி கணேஷை போடவில்லை. ஆனால் வயதானவர் கேரக்டருக்கு முதலில் டினு ஆனந்தை போட சொன்னாங்க. ஆனா அவ்ருக்கு அவ்ளோ சம்பளம் குடுக்க முடியாதது என்பதால் நான் டெல்லி கணேஷ் போட சொன்னேன்.
)
இந்த படத்துல சூப்பரா நடிச்சி குடுத்தாரு. இந்த படத்திற்கு 25 ,30000 சம்பளம் வாங்கினார். உவேசா நினைவு மாண்டமா திறப்பு நிகழ்ச்சிக்கு செலிபிரிட்டியாக டெல்லி கணேஷை மூப்பனார் கூப்பிட்டார். இதனையடுத்து 2 நாள் ஷூட்டிங் விட்டு வந்ததால் மூப்பனார் சன்மானமாக பணம் கொடுத்தார். டெல்லி கணேஷ் கோபப்பட்டுட்டாரு. எனக்கு தேசப்பற்று கிடையாதா? பணம் கொடுத்து அசிங்கப்படுத்தாதீங்க னு சொன்னார். பின்னர் அந்த பணத்தை மூப்பனாரிடமே திருப்பி கொடுத்தோம் என்று கூறியுள்ளார்
