#image_title
நடிகர் டெல்லி கணேஷ், தமிழ் சினிமாவில் தன் இயல்பான நடிப்பால் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர். திருநெல்வேலியில் பிறந்த அவர் ஏர்போர்ஸ் வேலைக்காக டெல்லி சென்ற போது அங்குள்ள தமிழ் நாடகக் குழுக்களோடு பழக்கம் ஏற்பட்டு மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்படிதான் அவருக்கு சினிமாவுக்கான வழி பிறந்துள்ளது. அவரின் நடிப்பைப் பார்த்து கவரப்பட்ட பாலச்சந்தர், 1976 ஆம் ஆண்டு ‘பட்டின பிரவேசம்’ என்ற திரைப்படத்தில் அவரைஅறிமுகப்படுத்தினார்.
1981 ஆம் ஆண்டு ‘எங்கம்மா மகாராணி’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார் டெல்லி கணேஷ். பின்னர் துணை கதாபாத்திரங்கள், நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். ‘அபூர்வ சகோதரர்கள்’ போன்ற சில படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் டெல்லி கணேஷ். அவருக்கு குணச்சித்திர நடிகராக மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது பாலச்சந்தர் இயக்கிய சிந்து பைரவி திரைப்படம்தான். அதன் பின்னர் நகைச்சுவை, குணச்சித்திரம் என தனது நடிப்பால் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்துள்ளார் டெல்லி கணேஷ்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அவர் உடல்நலக் குறைவால் தன்னுடைய 81 ஆவது வயதில் காலமானார். அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். ரசிகர்கள் அவரின் படக் காட்சிகள் மற்றும் நேர்காணல்களைப் பகிர்ந்து அவரை நினைவுக் கூர்ந்து வருகின்றனர்.
#image_title
ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரோடும் டெல்லி கணேஷ் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளனர். அதில் கமலோடு நடித்த பல படங்கள் அவருக்கு பேர் சொல்லும் படங்களாக அமைந்துள்ளன. ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் அவரிடம் “வில்லன் நடிப்பை வெளிப்படுத்துவதில் உங்களுக்குப் பிடித்த நடிகர் ரஜினியா? கமலா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு “வில்லன் நடிப்பென்றால் அது ரஜினிதான்.” எனப் பதிலளித்துள்ளார். அவரின் “ஆளவந்தான் போன்ற படங்களில் கமல்ஹாசனும் மிரட்டியுள்ளாரே?” என்று எதிர்க்கேள்வி வைக்கப்பட்ட போது “நான் இப்படியே நிகழ்ச்சியை விட்டு போய்விடவா?” என மழுப்பலான பதிலைக் கூறியுள்ளார்
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…