சூப்பர் குட் நியூஸ்..! பில்டர்கள் வீட்டை ஒப்படைப்பதில் தாமதம் செய்தால்… கடன் பொறுப்பை அவர்களே ஏற்க வேண்டும்… அதிரடி உத்தரவு..!!

Spread the love

பில்டர்கள் வீட்டை ஒப்படைப்பதில் தாமதம் செய்தால், வங்கிகள் மற்றும் கட்டுமான நிறுவனங்களே கடன் பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று சுப்ரீம் கோர்ட்டு இடைக்காலத் தடை விதித்துள்ளது. குறிப்பாக ‘சப்வென்ஷன்’ திட்டத்தின் கீழ் வீடு வாங்கி ஏமாந்த வாடிக்கையாளர்களிடம், வீடு ஒப்படைக்கப்படும் வரை வங்கிகள் இ.எம்.ஐ வசூலிக்கக் கட்டாய நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

முத்தரப்பு ஒப்பந்தப்படி, வீடு ஒப்படைக்கப்படும் வரை பில்டர்கள் இ.எம்.ஐ செலுத்த வேண்டும். ஆனால், அவர்கள் தவறு செய்யும் பட்சத்தில், வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் வசூலித்து இரட்டைப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால், தேக்கமடைந்த வீட்டுத் திட்டங்களில் ஏமாந்த வாடிக்கையாளர்களுக்கான ‘கடன் நிவாரண திட்டம்’ குறித்து பதிலளிக்க, உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் வி. மோகன் அமர்வு, நுகர்வோர் ஏமாறுவதைத் தடுக்க, முழு கடன் இழப்பையும் வங்கிகளும், பில்டர்களும் ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை கருத்தில் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை நடுத்தர வர்க்கத்தினருக்கு சாதகமான, வீடு வாங்குவோர் ஏமாறுவதைத் தடுக்கும் முக்கிய முடிவாகப் பார்க்கப்படுகிறது.

Soundarya

Recent Posts

“எங்க நாட்டுக்கு நாங்கதான் ராஜா… நான் சொல்றத தான் கேப்பாங்க”…. ட்ரம்பிற்கு நெதன்யாகு கொடுத்த மரண மாஸ் பதிலடி…. உலக அரசியலில் பரபரப்பு…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிவுறுத்தல்களின்படியே இஸ்ரேல் செயல்படுகிறது என்ற கூற்றுகளை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.…

1 minute ago

“500 பேர் வர்ற கோயிலுக்கு 10 கோடி-ல கார் பார்க்கிங்கா?”… சட்டசபையில் பொங்கிய அமைச்சர் ரமேஷ்…. சேகர்பாபு கொடுத்த அதிரடி பதில்…!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் மற்றும் கோயில் நிதி பயன்பாடு குறித்து தற்போதைய அமைச்சர் ரமேஷ்…

13 minutes ago

“அங்கேயே தங்க வச்சது தான் தப்பா போச்சு”… பெரியபாளையம் இறால் ஆலையில் நடந்தது என்ன?… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

பெரியபாளையத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அம்மோனியா வாயு கசிவு விபத்து, பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.…

29 minutes ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பழிதீர்க்கப் போட்ட பயங்கர ஸ்கெட்ச்… நடுவழியில் தூக்கிய தனிப்படை… அரக்கோணத்தில் சிக்கிய ‘ஒற்றைக்கண்’ ரவுடி…!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கே.பி நகர் பகுதியில் வசித்து வரும் பிரபல ‘ஏ ப்ளஸ்’ பிரிவு ரவுடியான ஜெயபால் (என்ற)…

34 minutes ago

“இதனால் ஒன்றும் ஆகாது”… திருப்பூர் பள்ளி மாணவியிடம் கைவரிசை காட்டிய ஊழியர்… இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி…!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவிக்கு…

44 minutes ago

“60 வயதில் வக்கிர புத்தி.. 15 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்”… அலறல் சத்தம் கேட்டு கதவைத் திறந்த அக்கம் பக்கத்தினர்.. உள்ளே கண்ட ரத்தக் கறை காட்சி…!

மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் இரு முதியவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம்…

48 minutes ago