பொது மன்னிப்பு கேட்கணும்… மேலும் ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு ஸ்டாலினுக்கு நோட்டீஸ்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி ..!!

Spread the love

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழகத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு சட்டப்பூர்வ மானநஷ்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடந்த ஜூன் 8 ஆம் தேதியன்று திமுகவின் சமூக வலைதளப் பக்கத்தில், சென்னையில் அமலாக்கத்துறை பறிமுதல் செய்த ரூ.258 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கின் பின்னணியில் செயல்பட்ட ஜான் பிரிட்டோ என்பவர், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த அவதூறானப் பதிவு தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் எவ்வித ஆதாரமும் இன்றி திட்டமிட்டுப் பரப்பப்பட்டது என ஆதவ் அர்ஜுனா தனது நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறை செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஜான் பிரிட்டோவிற்கும், தனக்கோ அல்லது தனது குடும்பத்தினருக்கோ எவ்வித தொடர்பும் கிடையாது என்றும், அவர் தனது உறவினரே அல்ல என்றும் ஆதவ் அர்ஜுனா திட்டவட்டமாக விளக்கமளித்துள்ளார். இந்தத் தவறான குற்றச்சாட்டுக்காக மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக 48 மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெனில் ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு கோரி சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்களின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அவரது வழக்கறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.

Soundarya

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

5 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

6 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

6 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

6 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

6 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago