actor LK akshay kumar

சிறை பட நாயகன் அக்‌ஷய் குமார் நடித்த 2வது படம்… அப்படி ஒரு முடிவை எடுத்த தயாரிப்பாளர் லலித்குமார்!

By Elango on மாசி 7, 2026

Spread the love

கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதி வெளியான படம் சிறை. இந்த படத்தில் விக்ரம் பிரபு நாயகனாகவும் தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமாரின் மகன் அக்சய் குமார் மற்றொரு நாயகனாகவும் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. இந்த படத்தில் அறிமுக நடிகராக நடித்து ரசிகர்களின் மத்தியில் ஒரு நல்ல அடையாளத்தை அக்சய் குமார் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் அவர் நடித்த ராவடி படம் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகளை வேகமாக முடித்து இன்னும் 2 மாதங்களுக்குள் அந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் லலித்குமார் படக்குழுவினருக்கு அறிவுறுத்தி இருக்கிறார். ஏனெனில் சிறை படம் ஏற்படுத்திய தாக்கம் குறைவதற்குள் தனது மகனின் 2வது படமும் ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்பதால் இந்த முடிவில் லலித்குமார் இருந்து வருகிறார்.