தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்து ஆட்சியை இழந்ததைத் தொடர்ந்து, தோல்விக்கான காரணங்களை ஆராய அக்கட்சி சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, வெற்றி-தோல்வி அடைந்த வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை நேரில் சந்தித்து கருத்துக்களைக் கேட்டறிந்தது. அப்போது, பெரும்பாலான நிர்வாகிகள் தேர்தல் களத்தில் கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு திருப்திகரமாக இல்லை என்றும், வரும் காலங்களில் திமுக தனித்து போட்டியிட வேண்டும் என்றும் தங்களது விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர். மேலும், உட்கட்சிப் பூசல்கள் சரியான நேரத்தில் சரிசெய்யப்படாததே இந்த பின்னடைவுக்கு முக்கிய காரணம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த கள ஆய்வின் போது மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பு அமைச்சர்கள் பலரின் செயல்பாடுகள் குறித்தும் கட்சியின் தொண்டர்களும் நிர்வாகிகளும் அக்குழுவிடம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இத்தகைய தனித்தனி கருத்துக்கள் மற்றும் புகார்களைத் தொகுத்து, முழுமையான ஒரு அறிக்கையாகத் தயாரிக்கும் பணியில் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த இறுதி அறிக்கை வரும் 10-ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் கட்சியில் அதிரடி மாற்றங்களைச் செய்ய தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதன் ஒரு பகுதியாக, கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த திமுக தலைமை புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளது. தற்போது பெரும்பாலான மாவட்ட செயலாளர்களின் கீழ் 4 முதல் 6 சட்டமன்ற தொகுதிகள் வரை உள்ளதால், பணிகளைத் துரிதப்படுத்த அந்த எண்ணிக்கையைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிர்வாக வசதிக்காக திமுகவின் மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க தலைமை திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அண்ணா அறிவாலயத்தில் இருந்து வெளியாகும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதுரை முன்னாள் துணை மேயரும், அதிமுக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளருமான பி.எம். மன்னன், தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.30…
மேற்கு வங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் கங்காராம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரிண்டு சர்க்கார் (46), அரசு பேருந்து நடத்துநராகப்…
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மனைவியின் முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில், இருவரையும் சமாதானம் செய்யச் சென்ற நண்பர்…
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஷிகா…
கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…
நீலகிரி மாவட்டம் பில்லூர்மட்டம் சடையன் கொம்பை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனதாக கடந்த…