“திமுக 10 லட்சம் கோடி… தவெக 3 மாசத்துல 20,000 கோடி”…. சட்டசபையை அலறவிட்ட இபிஎஸ்…. இப்படி ஒரு கணக்கை யாரும் எதிர்பார்க்கலையே…!

By Nanthini on ஆவணி 11, 2026

Spread the love

தமிழகத்தில் 2021 முதல் 2026 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில், மாநிலத்தின் மொத்தக் கடன் ரூ.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.10 லட்சம் கோடியாக அதிகரித்ததாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் தமிழ்நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் சுமார் ரூ.1.28 லட்சம் கடன் சுமை விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் தவெக அரசும் ரூ.20,000 கோடிக்கும் அதிகமாகக் கடன் வாங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில், இன்று சட்டமன்றத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, புதிய அரசின் நிதி மேலாண்மையைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். “வெள்ளை அறிக்கை வெளியிட்ட தவெக அரசு, ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களிலேயே ரூ.20,000 கோடிக்கும் மேல் கடன் வாங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நிதி நெருக்கடியைக் சுட்டிக்காட்டி ஆட்சிக்கு வந்தவர்கள், அதே பாணியில் கடனைப் பெருக்கிக் கொண்டே சென்றால், இந்த ஐந்து ஆண்டுகளின் முடிவில் தமிழ்நாட்டின் மொத்தக் கடன் ரூ.20 லட்சம் கோடியைத் தாண்டிவிடும் அபாயம் உள்ளது” எனச் சுட்டிக்காட்டி பேரவையில் தனது காரசாரமான கண்டனத்தைப் பதிவு செய்தார்.