திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான மறைந்த மு.கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, மருத்துவர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருவதோடு, அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தயாளு அம்மாளின் தற்போதைய உடல்நிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை விரைவில் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தத் தகவல் திமுக தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
