இனி ஏர் இந்தியா ஃப்ளைட்ல போகவே மாட்டேன்.. டேவிட் வார்னர் வெளியிட்ட அதிர்ச்சி தரும் பதிவு..!

By Nanthini on ஆனி 13, 2025

Spread the love

குஜராத் மாநில அகமதாபாத் நகரில் இருந்து பிரிட்டன் நாட்டில் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று விபத்தில் சிக்கியது.  விபத்தில் சிக்கிய இந்த விமானம் அகமதாபாத்திலிருந்து நேற்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் நகருக்கு புறப்பட்டது. ஏர் இந்தியா விமான விபத்துக்கு சொந்தமான இந்த விமானத்தில் மொத்தம் 242 பயணிகள் பயணித்துள்ளனர். இவர்களில் 169 பேர் இந்தியர்கள் என கூறப்படுகிறது. விமானத்தில் பயணித்த ஒருவர் உயிர் பிழைக்க மற்ற அனைவருமே துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். அது மட்டுமல்லாமல் விமான விழுந்த இடம் மருத்துவக் கல்லூரி வளாகம் என்பதால் அங்கிருந்த மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவர்கள் உட்பட மருத்துவர்கள் பலரும் உயிரிழந்துள்ளனர்.

   

இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள நிலையில் விமான விபத்து தொடர்பாக ஏர் இந்தியா முன்னாள் ஊழியர் விவேக் பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ளார். அதாவது விமானத்தில் பல ஆண்டுகளாகவே பிரச்சனைகள் இருப்பதை பைலட் உட்பட விமான குழுவினர் நிறுவனத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை என்று அவர் கூறியுள்ளார். அந்த ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், இது உண்மை என்றால் இனி நான் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார். இந்தச் செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.