அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்குக் குடிபெயர்ந்த பிரக்ஞா நரேந்திரா என்ற இந்தியத் தாய், அமெரிக்க உச்சரிப்பில் பேசும் தனது மகளுக்கு இந்தியாவில் உள்ள சொற்களை உச்சரிப்பதில் ஏற்படும் சிரமங்கள் குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் வாழத் தொடங்கிய பிறகு, அமெரிக்க உச்சரிப்பு கொண்ட தனது குழந்தைக்குச் சில வார்த்தைகளைச் சரியாகச் சொல்வதே மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளதாக அவர் அதில் நகைச்சுவையாகப் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், “சித்ரா” மற்றும் “பெங்களூரு” போன்ற பெயர்களைத் தனது மகளைச் சரியாக உச்சரிக்க வைக்க அந்தத் தாய் முயற்சி செய்கிறார். ஆனால், சிறுமி தனது அமெரிக்க உச்சரிப்பிலேயே “சித்-தி-ரா” என்றும், பெங்களூரு என்ற வார்த்தையின் இறுதியில் வரும் ‘ரா’ ஓசையைச் சரியாக உச்சரிக்க முடியாமலும் தணறுகிறார். மகளிடம் இதை எப்படிப் புரியவைப்பது என்று தெரியாமல் தாய் சிரிக்க, இந்த அழகான உரையாடல் பார்ப்பவர்களைக் கவர்ந்துள்ளது.
https://www.instagram.com/reel/DcGEEEPxDXh/?utm_source=ig_web_button_share_sheet
மேலும், இந்த உச்சரிப்புச் சிக்கல் காரணமாகச் சிறுமி சொற்களின் ஒலிப்பு முறையை வைத்தே எழுத்துகளை எழுதுவதால், ஆங்கிலத்தில் ‘Spelling’ எழுதுவதிலும் குழப்பங்கள் ஏற்படுவதாகத் தாய் விளக்குகிறார். “இது வேடிக்கையாக இருந்தாலும் ஒரு பெரிய போராட்டமாக இருக்கிறது” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் ரசித்து, அந்தச் சிறுமியின் மழலை உச்சரிப்பு மிகவும் அழகாக இருப்பதாகப் பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
