தமிழகத்தையே உலுக்கும் கொடூரம்… வீட்டுக்குள் வீசிய துர்நாற்றம்… மகன், காதலனுடன் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம்… போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!

Spread the love

திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்த குடியாத்தத்தை சேர்ந்த பெண் ஒருவர் திருப்பதியில் மகன் மற்றும் காதலனுடன் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த சத்யராஜ் (30) தனது மனைவியை பிரிந்து அதே பகுதியை சேர்ந்த பொன்னக்குட்டே நாயகி (30) என்ற பெண்ணுடன் திருமணத்திற்கு புறம்பான உறவு வைத்திருந்தார். ஏற்கனவே திருமணம் ஆன நாயகி தன்னுடைய 3 வயது மகனுடன் மூன்று மாதங்களுக்கு முன்பு சத்யராஜ் உடன் திருப்பதியில் அரசு சார்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் வழங்கிய இந்திரம்மா அடுக்குமாடி வீட்டில் வாடகைக்கு குடி பெயர்ந்தார்.

அந்தப் பகுதியில் தினக்கூலி வேலைகளை செய்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். இப்படியான நிலையில் இந்த மாதம் 22ஆம் தேதி காலை முதல் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. அதே நேரத்தில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் உடனே அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டின் கதவுகள் திறந்து பார்த்தபோது மூன்று பேரின் உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சத்யராஜ் தூக்கில் தொங்கிய நிலையிலும் நாயகி தனது மகனுடன் கழிவறைக்கு அருகிலும் கிடந்துள்ளனர்.

உடல்களுக்கு அருகில் விஷ பாட்டில் கண்டெடுக்கப்பட்டதால் நாயகி அவருடைய மகனுடன் முதலில் விஷம் குடித்து இறந்து இருக்க வேண்டும், பிறகு சத்யராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மறுப்புரம் சத்யராஜ் அந்த பெண்ணையும் அவருடைய மகனையும் கொன்று தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

தமிழகத்தில் 65 போதைப்பொருள் தடுப்புப்படை பிரிவு… விஜய் அதிரடி உத்தரவு..!!

தமிழக முதல்வர் விஜய், மாநிலத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த 65 போதைப்பொருள் தடுப்புப்படை பிரிவுகளை உருவாக்க அதிரடி…

7 minutes ago

இன்னும் 50 ஆண்டுகளுக்கு விஜய் தான்… இளம் அமைச்சர் கீர்த்தனா அதிரடி..!!

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய ஆட்சியில், மிக இளம் வயது அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கீர்த்தனா, தமிழக அரசியல்…

11 minutes ago

200 யூனிட் இலவச மின்சாரம் யாருக்கெல்லாம் கிடைக்கும்..? இதோ முழு விவரம்..!!

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற விஜய், தனது முதல் அரசாணையாக வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…

17 minutes ago

ஆரம்பமே சர்ச்சையா..? தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணித்தாரா விஜய்..? அரசியல் வட்டாரத்தில் பரவும் பரபரப்பு…!

தமிழக வெற்றி கழகத்தின் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் நிர்வாக ரீதியான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், சமீபத்தில் அக்கட்சியின்…

52 minutes ago

எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை: ஐந்து தலைமுறையை ஆட்டிப்படைத்த வாலியின் பேனா முனை…!

அண்ணாதுரை, கருணாநிதி என அரசியல் ஆளுமைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த வாலி, திரையுலகில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கவிஞராக உருவெடுத்தார். எம்.ஜி.ஆரின்…

1 மணத்தியாலம் ago

BREAKING: விஜய்க்கு ஸ்டாலின் கொடுத்த ‘அட்வைஸ்’.. பதிலுக்கு விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’! – தமிழக அரசியலில் பரபரப்பு….!

தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். சென்னை…

1 மணத்தியாலம் ago