“பக்கத்தில் இருந்தும் கண்டுபிடிக்க முடியலையே…” 51 ஆண்டுகளுக்கு பின் பெற்றோரை தேடி கண்டுபிடித்த மகள்…! கொடுமைகள் நிறைந்த வாழ்க்கை பயணம்…!!

By Devi Ramu on புரட்டாதி 18, 2026

Spread the love

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஃபோர்ட் வொார்த் பகுதியில், கடந்த 1971-ஆம் ஆண்டு 22 மாதக் குழந்தையாக இருந்த மெலிசா ஹைஸ்மித் என்பவரை, அவரது வீட்டிற்கு வந்த பேபி சிட்டர் கொடூரமாகக் கடத்திச் சென்றார். காவல்துறையினர் பல ஆண்டுகளாகத் தீவிரமாகத் தேடியும் எந்தவொரு தடயமும் கிடைக்கவில்லை.

இருப்பினும் நம்பிக்கையை விடாத பெற்றோர், ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் அவரது பிறந்தநாளைத் தொடர்ந்து கொண்டாடி வந்தனர். இந்நிலையில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, ’23andMe’ எனும் டிஎன்ஏ பரிசோதனை மூலம் மெலிசா ஹைஸ்மித் தனது சொந்தப் பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளைக் கண்டுபிடித்து பெற்றோருடன் மீண்டும் இணைந்துள்ளார்.

   

பெற்றோர் வாழ்ந்த இடத்திற்கு வெறும் 20 நிமிடத் தொலைவிலேயே ‘மெலனி வால்டன்’ என்ற பெயரில் அவர் வளர்ந்தது தெரியவந்துள்ளது. தான் சிறு வயதில் கடத்தப்பட்டவர் என்ற உண்மையே தெரியாமல் வளர்ந்த மெலிசா, அன்பற்ற மற்றும் கொடுமைகள் நிறைந்த சூழலிலேயே தனது சிறுவயது வாழ்கையை கழித்ததாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.