மகரஜோதி தரிசனத்துக்காக சபரிமலையில் பன்மடங்கு அதிகரித்த பக்தர்கள் கூட்டம் – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேவசம்போர்டு!

By Elango on மார்கழி 11, 2025

Spread the love

வருகிற ஜனவரி மாதம் 14 அல்லது 15ம் தேதிகளில் சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகரஜோதி காண பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருகிறது. சபரிமலையில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதையடுத்து தேவசம்போர்டு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சபரிமலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் மதியம் மற்றும் இரவு கோவில் நடை திறந்திருக்கும் நேரம் 45 நிமிடங்கள் வரை இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது மகரஜோதி காண வரும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் கணிசமாக அதிகரித்துள்ளதால் பக்தர்களின் வசதிக்காக இந்த 45 நிமிடங்கள் கூடுதலாக நடை திறந்து தேவசம் போர்டு நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.