அட கொடுமையே… வீடியோ காலில் பேச ரூ.6,000…! சொந்தமாக ஆப் தொடங்கி கல்லாகட்டும் தர்ஷா குப்தா… கொதிக்கும் இணையவாசிகள்…!

By Swetha on ஆடி 22, 2026

Spread the love

சின்னத்திரையில் குடும்பப் பெண்ணாக அறிமுகமாகி, சமூக வலைதளங்களில் கவர்ச்சிப் புகைப்படங்கள் மூலம் புகழ்பெற்றவர் நடிகை தர்ஷா குப்தா. ஜீ தமிழில் ‘முள்ளும் மலரும்’ சீரியல் மூலம் கவனம் ஈர்த்த இவர், ‘குக் வித் கோமாளி’ மற்றும் ‘பிக்பாஸ்’ போன்ற பிரபல விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் எதிர்பார்த்த பெரிய வெற்றி கிடைக்காத போதிலும், இன்ஸ்டாகிராமில் ‘Exclusive Subscriber’ வசதி மூலம் மாதம் ரூ 399 கட்டணத்தில் பிரத்யேகப் படங்களைப் பகிர்ந்து, மாதம் சுமார் ரூ 3.67 லட்சம் வரை வருமானம் ஈட்டி வந்தார்.

தற்போது இன்ஸ்டாகிராமையும் தாண்டி தனது பெயரிலேயே புதிய ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தி, அதில் பிரத்யேகக் கட்டணப் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதன்படி பிறந்தநாள் வீடியோ காலிற்கு ₹6,000, பிராண்ட் புரமோஷனுக்கு ரூ 50,000, ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷனுக்கு ரூ 1,000 எனப் பல ஸ்பெஷல் திட்டங்களையும் சலுகைகளையும் வழங்கியுள்ளார். இந்த அதிரடி ரேட் கார்டைப் பார்த்த இணையவாசிகள், பணத்திற்காக இவ்வளவு தூரம் இறங்குவதா என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

   

இருப்பினும், இந்த விமர்சனங்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாத தர்ஷா குப்தா, “யார் என்ன பேசினாலும் எனக்குப் பணமே முக்கியம்” என்ற மனநிலையுடன் தனது புது ஆப் பிசினஸைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். இணையவாசிகளின் கடுமையான வசவுகளுக்கு மத்தியிலும், சிறிதும் அஞ்சாமல் அவர் நடத்தி வரும் இந்த ஆப் விவகாரம் தான் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் சூடான விவாதப் பொருளாக மாறியுள்ளது.