அதிர்ச்சி வீடியோ…. கரூரில் மேடையில் நடனமாடிக்கொண்டே உயிர் பிரிந்த கலைஞர்…. பதறவைக்கும் காட்சி….!

By Nanthini on ஆடி 3, 2026

Spread the love

ஆடிக் கொண்டிருக்கும் போதே மேடை நடிகரும், நடன கலைஞருமான ஜீவா என்பவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகே நடைபெற்ற கோயில் திருவிழாவில், பொதுமக்கள் முன்னிலையில் மேடையில் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த நாட்டுப்புற நடனக் கலைஞர் ஜீவா, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விழாவின் ஒரு பகுதியாக மேடைக் கச்சேரி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி நடனமாடிய அந்த கலைஞர், எதிர்பாராதவிதமாக நெஞ்சைப் பிடித்தபடி மேடையிலேயே சரிந்தார்.

இதைப் பார்த்த சக கலைஞர்களும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்து, அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கலை நிகழ்ச்சியின் மூலம் மக்களை மகிழ்வித்துக் கொண்டிருந்த போதே ஒரு கலைஞரின் உயிர் மேடையிலேயே பிரிந்த இந்த நெஞ்சை உலுக்கும் காட்சி, ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

   

https://www.instagram.com/reel/DaUhClhgvSC