தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழையின் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இன்று புயல் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘டிட்வா’ புயல் எதிரொலியாக இன்று (நவ. 28) திருவாரூர், நாகை, தஞ்சை, புதுகைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலையில் மழை பெய்யும் அளவை பொறுத்து அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம். அப்படி விடுமுறை இல்லையெனில் பள்ளி செல்லும் மாணவர்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.
