தமிழ் சினிமாவில் 90களில் டாப் நடிகராக வலம் வந்தவர் நடிகர் அர்ஜுன். தற்போது வில்லன் மற்றும் முக்கியரோல்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் நவம்பர் 21ஆம் தேதி தீயவர்கள் குலை நடுங்க படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் கலையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், அரசியல் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார் . அதில் நிறைய பேர் என்னை அரசியலுக்கு அழைத்துள்ளார்கள். ஆனால் நான் போகவில்லை.
அரசியலுக்கு ஒரு விதமான மனநிலை வேண்டும் எப்போது இருக்கிற அரசியலுக்கு எல்லாம் பணம் தான். நான் ஏதாவது பிரச்சனை தட்டிக் கேட்கணும்னு அரசியலுக்கு வந்தால் அது நடக்காது. சில விஷயங்கள் பேசக்கூடாதுனு சொல்லுவாங்க. மேலும் அவங்க சொல்வதற்கு எல்லாம் ஜால்ரா போடணும். அது நம்மால் முடியாது. அதேபோல் பணம் இருந்தால் தான் இங்கே ஜெயிக்க முடியும். அந்த அளவிற்கு என்னிடம் பணம் இல்லை. இதனால் தான் அரசியலுக்கு வரவில்லை” என்று கூறினார்.
