அந்தமான் அருகே மலாக்கா நீரிணையில் சற்றுமுன் சென்யார் புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மலேசியா, இந்தோனேசியாவில் மிக கனமழை பெய்யும் என்றும், தமிழகத்தில் மிதமான அளவில் தான் மழை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இன்று உருவான இந்த புயல் அடுத்த 48 மணி நேரத்தில் முழுவதுமாக வலுவிழக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
