டிடிவி+ஓபிஎஸ்-ஐ மீண்டும் NDA கூட்டணியில் இணைக்க பாஜக போடும் திட்டம்… சம்மதிப்பாரா இபிஎஸ்..? பரபரக்கும் அரசியல்…!!

By Soundarya on கார்த்திகை 26, 2025

Spread the love
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளாக அரசியல் கட்சியினர் தங்களின் கட்சிகளை வலுப்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் பாஜகவும் இம்முறை எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்று போராடி வருகிறது. இந்நிலையில் நேற்று டெல்லி சென்ற நயி​னார் நாகேந்​திரன் அங்கு மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, மத்​திய சுகா​தா​ரத் துறை அமைச்​சர் ஜே.பி.நட்​டா, பாஜக மாநில தேர்​தல் ஒருங்​கிணைப்பாளர் பைஜ​யிந்த் பாண்டா உள்​ளிட்ட பாஜக தேசிய தலை​வர்​களை சந்​தித்து பேசி​னார்.
இந்த சந்​திப்​பில் வர இருக்கும் சட்​டப்​பேரவை தேர்​தலில் பாஜக​வுக்​கான தொகுதி பங்​கீடு​கள், கூட்​ட​ணி​யில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை இணைப்​பது குறித்​தும் ஆலோ​சிக்​கப்​பட்​டதாக தகவல் வெளியாகியுள்ளது.