இரவோடு இரவாக அதிவேகத்தில் கரையை கடக்கும் முரசு புயல்…. ஆந்திராவை உலுக்கும் பேரழிவு…. விஜய்யிடம் கைகூப்பிய சந்திரபாபு நாயுடு….!

Spread the love

இந்திய வானிலை மையத்தின் கணிப்புப்படி, ‘முரசு’ புயல் இன்று தீவிர புயலாக வலுப்பெற்று தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நெல்லூர் – நரசபூர் இடையே கரையைக் கடக்கவுள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்திலும், இடையிடையே 120 கி.மீ வேகத்திலும் சூறைக்காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 11.30 மணி முதல் நாளை (நவம்பர் 3) அதிகாலை 4 மணிக்குள் இந்த நிகழ்வு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆந்திர அரசு போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

புயலின் தாக்கத்தால் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் மின் கம்பங்கள் மற்றும் மின்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, விரைந்து சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு மின் இணைப்பைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரத் தேவையான மின் பணியாளர்களையும் உபகரணங்களையும் அனுப்பி வைக்குமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழக முதல்வர் விஜய்யைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் விஜய்யும் உடனடியாகச் சாதகமான பதிலை அளித்துள்ளார்.

ஏற்கனவே ‘அர்னாப்’ புயல் ஏற்படுத்திய பாதிப்புகளிலிருந்து மக்கள் முழுமையாக மீண்டு வருவதற்குள், தற்போது அடுத்தடுத்து உருவான முரசு புயல் ஆந்திர மக்களைக் கடும் சிரமத்திற்குள்ளாக்கியுள்ளது. பாபட்லா அருகே தீவிர புயலாக இது கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். தமிழகத்தின் உதவியோடு மீட்புப் பணிகளை விரைவுபடுத்த ஆந்திர அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Nanthini

Recent Posts

விபத்துனு நினைச்சா பெருங் கொள்ளை… சினிமா பாணியில் அரங்கேறிய ரூ.14 லட்சம் ஸ்கெட்ச்… நடுரோட்டில் மோதிய ஸ்கூட்டர்… வெளியானது அதிர்ச்சி CCTV…!!

டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…

39 minutes ago

“என் பொண்ணு கூட பழகுவியா?”… நள்ளிரவில் வீடு புகுந்து வெறிச்செயல்… மகளின் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய தந்தை… வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!

மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…

58 minutes ago

“பைக்கும் செயினும் தரலையா?”… பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கணவர்… வரதட்சணை கேட்டு கொடுமை… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!

சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…

1 மணத்தியாலம் ago

“அம்மா நான் எந்த தப்பும் பண்ணல!”… கதறிய மகள்… கருவி சொன்ன பொய்… ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து கதறி அழுத தாய்… மருத்துவமனையில் உடைந்த மர்மம்…!!

வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…

1 மணத்தியாலம் ago

அதிசயமா? தெய்வத்தின் அவதாரமா?… ஆற்றில் கிடைத்த விசித்திர தாடைக்கல்… சாமி என திரண்டு வணங்கும் மக்கள்… நடந்தது என்ன?…!!

மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…

1 மணத்தியாலம் ago

வீடு திரும்பாத தந்தை… துப்பாக்கியை காட்டி மிரட்டிய கும்பல்… சகோதரிகளுக்கு நேர்ந்த கொடூரம்… அதிரடி வேட்டையில் சிக்கிய காமுகர்கள்…!!

பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…

1 மணத்தியாலம் ago