7 கிலோமீட்டர் கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் டிட்வா புயல் சென்னையில் இருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டு உள்ளது புயல் சென்னையிலிருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், குமரி, மதுரை, நாகை, திருச்சி, காரைக்கால் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் காரைக்கால் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் செங்கை மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புயல் எதிரொளியாக இன்று நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல விழுப்புரம் மற்றும் தஞ்சையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் மழை நிலவரத்தை பொறுத்து பிற மாவட்டங்களிலும் விடுமுறை அளிக்க ஆட்சியர்களுக்கு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
