தற்போது வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து மழை பெய்து வருகிறது. பொதுவாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் தான் புயல் போன்ற நிகழ்வுகளால் மழைக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். ஆனால் நடபாண்டில் பருவமழை தொடங்கிய சில நாட்களிலேயே மோன்தா புயல் உருவாகி ஆந்திராவை நோக்கி சென்றது. தமிழகத்தில் வட மாவட்டங்களில் ஓரளவுக்கு மழையை கொடுத்தது. தற்போது பருவமழை சற்று இடைவெளி விட்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து அடுத்த மாதம் 10ஆம் தேதியிலிருந்து மீண்டும் பருவக்காற்று திரும்பி 15ஆம் தேதிக்குப் பிறகு மழை தீவிரம் எடுக்கும். இந்த நிலையில் வரும் நவம்பர், டிசம்பர் மாதத்தில் வலுவான புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார் . இந்திய பெருங்கடலில் நிலவும் வெப்பநிலை மாறுபாடுகளால், எதிர்மறை நிகழ்வு உருவாகும் என்று கூறப்படுகிறது. இதனால், 2019-ம் ஆண்டு போல, பல தீவிர மற்றும் அதி தீவிர புயல்கள் உருவாகும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
