மொத்தமாக மாறப்போகும் TVK… N.ஆனந்த் மீது பாயும் அதிரடி ஆக்க்ஷன்..? விஜய் எடுத்த முக்கிய முடிவு..!!

By Soundarya on ஐப்பசி 30, 2025

Spread the love

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வரும் நிலையில் அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அடுத்தடுத்து தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றார். இந்நிலையில் தவெகவில் N.ஆனந்திடம் இருக்கும் அதிகாரத்தை பிரித்துக் கொடுக்கும் முடிவுக்கு விஜய் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இப்படி நடந்தால், ஆனந்தின் ஆதரவு நிர்வாகிகள் மாற்றப்படலாம் என்றும் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் ஆகியோரின் ஆதரவாளர்களுக்கு பதவிகள் பிரித்துக் கொடுக்கப்படலாம் எண்மரும் சொல்லப்படுகிறது. மேலும் கட்சியின் உள்கட்டமைப்பை மொத்தமாக மாற்ற விஜய் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.