WhatsApp Web-ல் ஒளிந்திருக்கும் ஆபத்து… தெரியாத எண்களில் இருந்து இந்த ஃபைல் வந்ததா… CERT-In வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு…!

By Visaka on ஆனி 29, 2026

Spread the love

இணைய குற்றவாளிகள் போலியான விஷுவல் பேசிக் ஸ்கிரிப்ட் இணைப்பு கோப்புகள்மூலம் பயனர்களின் கணினிகள் மற்றும் பிற சாதனங்களை ஹேக் செய்ய தீவிரமாக முயற்சித்து வருவதாக இந்திய கணினி அவசரநிலைப் பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே மால்வேர் அல்லது வைரஸால் பாதிக்கப்பட்ட கோப்புகள் உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாகவோ அல்லது தெரியாத எண்களிலிருந்தோ கோப்பு இணைப்புகளாகவரக்கூடும் என்பதால், நம்பகத்தன்மை இல்லாத அல்லது அடையாளம் தெரியாத கோப்புகளை எக்காரணம் கொண்டும் திறந்து பார்க்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. உங்களின் தனிப்பட்ட தரவுகளையும் சாதனங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க, வாட்ஸ்அப் வெப் பயன்படுத்தும்போது வரும் சந்தேகத்திற்குரிய லிங்க்குகள் மற்றும் ஃபைல்களைத் தவிர்த்து, மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் செயல்படுமாறு CERT-In அறிவுறுத்தியுள்ளது.