“எடப்பாடிக்கு அடுத்த அதிர்ச்சி”…. சிவி சண்முகம் இன்னும் தவெக-வில் இணையாதது ஏன்?…. பின்னணியில் இருக்கும் ரகசிய நிபந்தனை….!

Spread the love

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. இந்தத் தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிமுக, தனது எம்.எல்.ஏ-க்களை ஒவ்வொருவராக இழந்து வருவதுடன், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்களையும் தக்கவைக்க முடியாமல் தவித்து வருகிறது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துவிட்ட சூழலில், கட்சியின் மூத்த தலைவரான சி.வி.சண்முகம் எடப்பாடி பழனிசாமியுடன் கடுமையான மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார்.

தேர்தல் முடிந்தது முதலே அதிமுகவில் உள்ள அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்து, தவெகவிற்கு ஆதரவு அளிக்கவும், அக்கட்சியுடன் கூட்டணி அமைக்கவும் தீவிரமாகச் செயல்பட்டவர் சி.வி.சண்முகம். இருப்பினும், அவர் இதுவரை தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணையாமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. அதிமுகவினர் தொடர்ந்து தவெகவில் குவிந்து வருவது, அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் ஏற்கனவே ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், தவெகவில் இணைய ஆர்வமாக இருக்கும் சி.வி.சண்முகம், தனக்கு மாநில அவில் முக்கியப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதே அவரது தாமதத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

தேர்தலுக்கு முன்பே தவெகவில் இணைந்த செங்கோட்டையனை அக்கட்சியினர் எளிதாக ஏற்றுக்கொண்டனர். ஆனால், தற்போது தேர்தல் வெற்றிக்குப் பிறகு அதிமுகவினர் தவெகவை நோக்கி வருவது சுயநல அரசியல் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில், சி.வி.சண்முகம் போன்ற ஒரு மூத்த தலைவருக்கு மாநில அளவிலான உயர் பொறுப்பு வழங்கப்பட்டால், அது தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் நீண்டகாலமாக உழைத்த நிர்வாகிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பதால் தவெக தலைமை இந்த விஷயத்தில் சற்று தயக்கம் காட்டி வருகிறது.

மறுபுறம், அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அடுத்தடுத்து தவெகவில் இணைவது குறித்து ஆளுநர் அர்லேகரிடம் எதிர்க்கட்சிகள் புகார் அளித்துள்ளன. இந்த விவகாரத்தில் ஆளுநர் விசாரணை நடத்த முற்படுவதால், புதிய சேர்க்கைகளை தற்காலிகமாக ஒத்திவைக்க தவெக தலைமை முடிவு செய்துள்ளது; இதுவும் சி.வி.சண்முகத்தின் இணைவிற்கு மற்றொரு தடையாக அமைந்துள்ளது. அதேசமயம், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியுடனான மோதல் மற்றும் விழுப்புரம் மாவட்ட அதிமுக தலைமைகளுடனான தினசரி குடைச்சல்கள் காரணமாக, விரைவில் தனக்கான முடிவை அறிவிக்குமாறு தவெக தலைமைக்கு சி.வி.சண்முகம் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Nanthini

Recent Posts

“ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டுப் பலன்கள் இனி விரிவடையும்…” PF பிடித்தம் செய்வதற்கான சம்பள வரம்பு உயர்வு…. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி ஒப்புதல்…!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் பி.எப். தொகை…

6 minutes ago

“அமைச்சர்களுக்கு மேஜையில் விதவிதமான அசைவ உணவு…” தொண்டர்களுக்கு குப்பை தொட்டி அருகே உணவா…? தவெக 100-வது நாள் சாதனை விளக்க கூட்டத்தில் சர்ச்சை…!!

திருப்பத்தூரை அடுத்த ஆதியூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 100-வது நாள் சாதனை…

23 minutes ago

“அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்லத்தான்…” இது புது கணக்கு.. முதல்வர் விஜயின் லண்டன் பயணம் …. திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி பேச்சு…!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.…

55 minutes ago

“என்னை விட்டுரு…” மாற்றுத்திறனாளி பெண்ணின் அலறல் சத்தம்… வேலைக்கு சென்ற இடத்தில் தர்ம அடி வாங்கிய தொழிலாளி….. பரபரப்பு சம்பவம்…!!

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் 57 வயதான சுனில். கட்டிடத் தொழிலாளியான இவர், தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகிலுள்ள சோட்டையன்தோப்பு…

1 மணத்தியாலம் ago

“கடவுளே இது என்ன கொடுமை…! கணவர் இறந்த துக்கத்தில் 7 மாத கர்ப்பிணி தற்கொலை… பரிதவிக்கும் 4 வயது குழந்தை… 8 ஆண்டு கால வாழ்க்கையில் பெரும் சோகம்…!!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்துள்ள கவசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் 34 வயதான சரத்குமார். இவர் ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள ஒரு…

1 மணத்தியாலம் ago

“டேட்டிங் செயலியில் வலை….”  ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்த கும்பல்…. வாலிபரை கத்தியால் குத்தி கொடூரம்…. நடுங்க வைக்கும் பின்னணி…!!

விழுப்புரம் மாவட்டம் பம்பாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான பச்சைமுத்து. இவர் பிரபல டேட்டிங் செயலியைப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில்,…

2 மணத்தியாலங்கள் ago