அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்ட 25 எம்.எல்.ஏ-க்களில், 23 பேர் மீண்டும் தஞ்சம் அடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் சி.வி.ஜயபாஸ்கர் ஆகிய இருவர் மட்டுமே இன்னும் கட்சிக்குத் திரும்பவில்லை. இதில் சி.விஜயபாஸ்கர் திமுகவில் இணைய நேரம் பார்த்துக் கொண்டிருக்க, சி.வி.சண்முகமோ எந்தவொரு அரசியல் நடவடிக்கையும் இல்லாமல் அமைதி காத்து வருகிறார். தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசுக்கு எதிராக வாக்களிப்பது, சபாநாயகரிடம் எடப்பாடி புகார் அளித்தது எனப் பல அரசியல் திருப்பங்களுக்குப் பிறகு, தற்போது சண்முகத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பதை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு தனது தரப்பிற்கு உத்தரவிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமிக்கும் சி.வி.சண்முகத்திற்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியபோது, “அதிமுக சார்பில் கிடைத்த எம்.எல்.ஏ பதவியே வேண்டாம், அதை ராஜினாமா செய்துவிட்டு என் சொந்தச் செல்வாக்கில் மீண்டும் ஜெயித்துக் கொள்கிறேன்” என்று சண்முகம் ஆவேசப்பட்டார். ஆனால், அவரது அண்ணன் ராதாகிருஷ்ணனும் குடும்பத்தினரும் இதற்கு முட்டுக்கட்டை போட்டனர். “ஏற்கனவே எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டாய், இப்போது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தால் அரசியல் செய்ய முடியாது; உனது ராஜினாமாவைத்தான் எடப்பாடி எதிர்பார்க்கிறார். அதிமுக ஒன்றும் எடப்பாடியின் சொத்தல்ல, கட்சிக்குள்ளே இருந்து அரசியல் செய்” என்று அவர்கள் கொடுத்த அறிவுரையை ஏற்றே சண்முகம் கடந்த ஒரு மாத காலமாக அமைதி காத்து வருகிறார்.
இந்தச் சூழலில், எடப்பாடியின் தூதராகச் செயல்படும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகத்தைத் தொடர்புகொண்டு சமாதானப் பேச்சுகளை நடத்தியுள்ளார். “மன்னிப்புக் கடிதம் எல்லாம் வேண்டாம், நீங்கள் எடப்பாடியாரைச் சந்தித்துப் பேசினால் போதும், பழையபடி ஃபார்முக்கு வாருங்கள்” என்று வேலுமணி அழைக்க, அதற்குச் சண்முகமோ, “அப்படியானால் எடப்பாடியையே என்னிடம் பேசச் சொல்லுங்கள்” என்று அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். சண்முகத்தின் இந்த நிபந்தனை எடப்பாடி தரப்பிற்குப் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வரும் ஜூன் 18-ஆம் தேதி சட்டமன்றம் கூடவிருக்கும் நிலையில், தவெக அரசை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்யத் திட்டமிட்டுள்ளது. அப்போது சண்முகம் வெளிநடப்பு செய்தால் அது எடப்பாடிக்கு ஆதரவாக முடியும் என்றும், சபையிலேயே அமர்ந்திருந்தால் அது கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் விமர்சனத்திற்குள்ளாகும் என்றும் வேலுமணி சுட்டிக்காட்டியுள்ளார். இந்த இக்கட்டான அரசியல் சூழலில், தனது ஆளுமையையும் அரசியல் எதிர்காலத்தையும் தக்கவைத்துக் கொள்ள சி.வி.சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…