பாக்யராஜ் பட நடிகர் காஜா ஷெரிஃபா இது..? இப்படி ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாரே..!

By Soundarya on டிசம்பர் 25, 2024

Spread the love

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஈடாக மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடிப்பவர்கள் தான் துணை நடிகர்கள் , அப்படி மக்களின் மத்தியில் பிரபலம் அடைந்த ஒரு நடிகர் தான் காஜா ஷெரிப். இவர் தமிழ் மொழில் பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

இவர் தமிழில் புதிய வார்ப்புகள் என்ற படத்தின் மூலமாக தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார். அதன் பிறகு உதிரிப்பூக்கள் , இயக்குனர் பாக்யராஜ் நடிப்பில் வெளியான அந்த ஏழு நாட்கள் என பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் பாக்யராஜுக்கு சிஷ்யனாக நடித்துள்ளார். இவர் தற்போது திரைப்படத்தை விட்டு விலகி சிங்கப்பூர் , மலேசியா போன்ற நாடுகளில் காலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

   

 

இவர் பற்றின எந்த ஒரு தகவல்களும் வெளிவராமல் இருந்த நிலையில் , தற்போது இவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பலரையும் ஆச்சர்யம் அடைய வைத்து வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் இணையத்தில் வெளியான இந்த வீடியோவானது ரசிகர்களால் அவர்களது நண்பர்களுக்கு பகிரப்பட்டு வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by sengottai Selvam (@sengottai_selvam)