“திமுக ஆட்சியில் யாருக்கு பணம் கைமாறியது?”…. ஜெம் க்ராணைட் வீரமணி விவகாரத்தில் வெடித்த அமைச்சர்…. அம்பலமான உண்மை….!

By Nanthini on புரட்டாதி 21, 2026

Spread the love

சென்னையில் வீட்டின் கூரை மீது சோலார் பேனல்கள் அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்பவர்களுக்கான மாநில அரசின் கூடுதல் மானியத் திட்டத்தை அமைச்சர் நிர்மல்குமார் இன்று தொடங்கி வைத்தார். மத்திய அரசின் ‘பிரதமர் சூர்ய கர்’ திட்டத்தின் கீழ் 3 கிலோவாட் வரை மின் உற்பத்தி செய்பவர்களுக்கு வழங்கப்படும் ரூ.78,000 மானியத்துடன், இனி மாநில அரசு சார்பில் கூடுதலாக அதிகபட்சமாக ரூ.22,000 வரை மானியம் வழங்கப்படும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், மின்வெட்டு மற்றும் சட்டம்-ஒழுங்கு விவகாரங்கள் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதிலளித்தார். மாநிலத்தில் மின் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளில் அதை நிவர்த்தி செய்ய அரசு முழுவீச்சில் பணியாற்றி வருவதாகவும், சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர், கொளத்தூர் மக்களுக்கு நன்றி கூறியதன் மூலம் ஸ்டாலின் தனது அரசியல் பயணத்திற்கு அவரே முடிவுரை எழுதிவிட்டார் என்றும் குறிப்பிட்டார்.

   

தொடர்ந்து ‘ஜெம் க்ராணைட்’ வீரமணி விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர், திமுக ஆட்சிக் காலத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக வீடியோ ஆதாரங்கள் இருந்தும், அந்த விவகாரம் ஏன் மூடி மறைக்கப்பட்டது என்று கடுமையாகக் கேள்வி எழுப்பினார். பொள்ளாச்சி சம்பவத்திற்கு நிகரான இக்குற்றத்தில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்காமல் தப்பிக்க வைக்க யார் யாரிடம் பணம் பெற்றார்கள் என்பதற்கு அப்போதைய ஆட்சியாளர்கள் பதில் சொல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

   

கடந்த திமுக ஆட்சியில் இந்த வழக்கை முடித்து வைக்கக் காவல்துறை முனைப்பு காட்டியபோதிலும், தற்போது நீதிமன்ற உத்தரவின்பேரில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளி வீரமணி கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்றும், அரசியல் விமர்சனங்களைக் கடந்து மக்கள் நலப் பணிகளும் சட்ட நடவடிக்கைகளும் தங்கு தடையின்றித் தொடரும் என்றும் அவர் உறுதியளித்தார்.