இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் நீண்ட காலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுகிறார். கடந்த வருடம் அவருக்கும், தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டுக்கு இடையில் மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேற இருப்பது ஏறக்குறைய உறுதியானது. ஆனால் எந்த அணிக்கு செல்வார் என்பதில் மர்மம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் வரும் 2026 ஐபிஎல் தொடருக்கான Mini auction-க்கு முன்பாக வீரர்களின் Trade சூடுபிடித்துள்ளது. RR கேப்டன் சஞ்சு சாம்சனை வாங்கும் முயற்சியில் CSK அணி தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அதை உறுதி செய்யும் விதமாக சஞ்சு சாம்சனை வாங்க, ஜடேஜாவை RR அணிக்கு CSK வழங்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
