அடச்சீ… பெத்த தாயா இவங்க… இல்ல மிருகமா?… அழுதுகிட்டே இருந்த 2 வயது மகனின்… கழுத்தை கத்தியால் அறுத்த கொடூர தாய்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 1, 2026

Spread the love

ஃபரிதாபாத் பகுதியில் மூன்று குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் பொறுப்பால் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளான ஒரு தாய், தனது இரண்டு வயது மகனின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ள கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்றைய தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், குழந்தைகள் ஏதோ தவறு செய்ததாகக் கூறி மூவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளார்; தொடர்ந்து அழுது கொண்டிருந்த அந்த பிஞ்சு குழந்தையின் கழுத்தை அறுத்து அவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

படுகாயமடைந்த குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர் சிகிச்சையும் பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று குற்றம் சாட்டப்பட்ட தாயைக் கைது செய்துள்ளனர்டன், தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

   

எவ்வளவு பெரிய மன உளைச்சலும் அழுத்தமும் ஏற்பட்டிருந்தாலும், ஒரு தாய் தனது சொந்தப் பச்சிளம் குழந்தைக்கு எதிராக இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டது சமூகத்தில் பெரும் சோகத்தையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.