அம்மா வரியா?… இல்ல என்னை விட்டுப் போயிடுவியா?… மருத்துவமனையில் பிஞ்சு குழந்தையைத் தவிக்கவிட்டு… தப்பியோடிய கொடூரத் தாய்…!!

By Swetha on ஆவணி 31, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு இரண்டு குழந்தைகளுடன் வந்த தாய் ஒருவர், அவசரகாலப் பிரிவில் ஒரு குழந்தையை மட்டும் விட்டுவிட்டு மற்றொன்றுடன் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பசியால் வாடிய அந்தப் பிஞ்சு குழந்தை தனது தாயைக் காணாமல் “அம்மா, அம்மா” என்று இடைவிடாமல் அழுது துடித்த காட்சி அங்கிருந்தவர்களின் நெஞ்சை உருக்கியது.

குழந்தையின் பரிதாப நிலையைக் கண்ட மருத்துவமனை ஊழியர்கள், உடனடியாக அந்தப் பச்சிளம் குழந்தைக்குப் பால், பிஸ்கட் மற்றும் புதிய ஆடைகளை வழங்கினர். சாப்பிடும் போதும் கூட பேசத் தெரியாத வயதில் தன் தாயைத் தேடி குழந்தை செய்த சைகைகளும், ஏக்கமும் காண்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்ததுடன், ஊழியர்களும் குழந்தைக்கு ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினர்.

   

https://twitter.com/pulsenewsbreak/status/2094231697437147286/video/1

   

இந்தச் சம்பவம் குறித்து உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு குழந்தையைவிட்டுச் சென்ற தாயைத் தேடும் தீவிரப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.