“எங்களால் முடியாது போங்க…” நோயால் தவித்த பெண்ணை நடுகாட்டில் வீசிச் சென்ற கொடூரக் குடும்பம்… நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்…!!

Spread the love

தெலுங்கானா மாநிலம் மஞ்சிர்யாலா மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதான லலிதா என்ற பெண், கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு கரீம்நகரில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால், அவரைத் தொடர்ந்து கவனித்துக்கொள்ள விருப்பமில்லாத குடும்பத்தினர் ஈவிரக்கமற்ற முடிவொன்றை எடுத்தனர். மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகப் பொய்கூறி அவரை காரில் ஏற்றிய உறவினர்கள், வழியில் காட்டாரம் – மேடாரம் சாலையோர வனப்பகுதியில் உள்ள புதருக்குள் அவரைத் தனியாக தவிக்கவிட்டுச் சென்றுவிட்டனர்.

அந்த வழியாகச் சென்ற மல்லேஷ் என்பவர், ஆதரவற்ற நிலையில் கிடந்த லலிதாவைக் கண்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் அளித்து உதவியுள்ளார். விரைந்து வந்த மருத்துவக் குழுவினர் அவரை மீட்டு மகாதேவபூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்தச் சம்பவம் குறித்து லலிதாவின் குடும்பத்தினருக்குக் காவல்துறை தகவல் தெரிவித்தும் அவர்கள் எவ்வித அக்கறையும் காட்டவில்லை. இதனால், அந்தப் பெண்ணை அனாதையாக விட்டுச் சென்ற உறவினர்கள் மீது அடுத்தகட்ட சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பது குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

Gayathri

Recent Posts

“வெளிநாட்டிலிருந்து திரும்பிய மறுநாளே கொடூரம்…” கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன்… பகீர் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மறுநாளே, மனைவியின் மீது கள்ளத்தொடர்பு சந்தேகம் கொண்டு அவரைக் கத்தியால் குத்திக்…

55 minutes ago

பிரசாதம் தருவதாக கூறி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை…! வீடியோ எடுத்து வெளிநாடுகளுக்கு விற்ற பூசாரி… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோயிலுக்கு வரும் சிறுமிகளிடம் பிரசாதம் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்து, அதனை வீடியோவாகப் பதிவு…

1 மணத்தியாலம் ago

“நள்ளிரவில் அலறிய பெண்கள்…” போதையில் அத்துமீறிய வாலிபரை கட்டி வைத்து அடித்த உறவினர்கள்… அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மதுபோதையில் வீட்டிற்குள் புகுந்து பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற 25 வயது இளைஞரை, பெண்களின் உறவினர்கள்…

2 மணத்தியாலங்கள் ago

விளையாட்டு வினையானதா?… Free Fire விளையாட்டால் விபரீதம்?… 2 சிறுவர்கள் கொடூரமாக குத்தி கொலை… பதறவைக்கும் சம்பவம்…!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் அஜ்மல் மற்றும் ஃபைசான் என்ற இரு சிறுவர்கள் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த துயர சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago

அங்க ஏதோ இருக்கு..! புதருக்குள் அசைந்த மர்ம உருவம்… கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு… இறுதியில் என்னாச்சு தெரியுமா?…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்திலுள்ள ஜலால்பூர் சோயா கிராமத்து வயல்வெளியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நாணல் புதர்களுக்கு நடுவே…

2 மணத்தியாலங்கள் ago