ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கரஸ்ரோட்டா ஆற்றில் முதலை இழுத்துச் சென்றதில் 57 வயது பெண் ஒருவர் காணாமல் போனார். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி, அந்த பெண்ணின் உடலை ஆற்றின் வழியாக முதலை இழுத்துச் செல்வதைக் காட்டுகிறது. பிஞ்சர்பூர் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள கான்டியா கிராமத்தில் திங்கள்கிழமை மதியம் சௌதாமினி மஹாலா என்ற பெண் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது வேகமாக ஓடும் நீரில் ஒரு முதலை அவரை இழுத்துச் சென்றது.
ஆற்றங்கரையில் இருந்த கிராம மக்கள் ஊர்வனத்தை விரட்ட முயன்றனர், ஆனால் அவரை மீட்க முடியவில்லை” என்று ஒரு போலீஸ் அதிகாரியை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.முதலை அந்தப் பெண்ணை ஆற்றில் இழுத்துச் செல்வதை உள்ளூர்வாசிகள் கண்டபோது, அவர்கள் அவளைக் காப்பாற்ற முயன்றனர், ஆனால் தோல்வியடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே காதல் திருமணம் செய்துகொண்ட கல்லூரி மாணவி, கணவர் செல்போன் அழைப்பை ஏற்காத விரக்தியில் தற்கொலை…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில்,…