பயங்கர ஷாக்.! தவெக MLA-க்களில் 41 பேர் மீது கிரிமினல் வழக்குகள்…? அதிர்ச்சி தரும் ADR அறிக்கை… கறைபடிந்த கைகளுடன் சட்டப்பேரவைக்குள் நுழைந்த எம்.எல்.ஏ-க்கள்..!!

By Soundarya on வைகாசி 11, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எம்.எல்.ஏ-க்களின் பின்னணி குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் (ADR) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழக சட்டப்பேரவையில் கிரிமினல் பின்னணி கொண்ட எம்.எல்.ஏ-க்கள் பட்டியலில் தவெக முதலிடம் பிடித்துள்ளது. அக்கட்சியின் மொத்தம் உள்ள 107 எம்.எல்.ஏ-க்களில் 41 பேர் (38%) மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், 19 எம்.எல்.ஏ-க்கள் மீது கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற தீவிரமான கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ளன.

அரசியலில் தூய்மை மற்றும் மாற்றத்தைக் கொண்டுவரப்போவதாகக் கூறி ஆட்சியைப் பிடித்த தவெக-வில், அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்களும் எம்.எல்.ஏ-க்களாகத் தேர்வாகியுள்ளனர். தவெக-வின் 107 எம்.எல்.ஏ-க்களில் 77 பேர் கோடீஸ்வரர்கள் என்பது அவர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மூலம் அம்பலமாகியுள்ளது. கட்சித் தலைவர் விஜய் ₹603 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பை அறிவித்து முன்னிலையில் உள்ள நிலையில், கட்சியின் பெரும்பாலான எம்.எல்.ஏ-க்களும் பெரும் வசதி படைத்தவர்களாகவே உள்ளனர். குற்றப் பின்னணி மற்றும் பணபலம் கொண்டவர்கள் அதிக அளவில் சட்டப்பேரவைக்குள் நுழைந்திருப்பது, “மாற்றத்தை” எதிர்பார்த்த வாக்காளர்களிடையே ஒருவித சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.