இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் வெளியான போது மிகவும் மோசமான விமர்சனங்களை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு நேர்காணலில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது, கூலி படம் நன்றாக இல்லை என்ற கருத்து அதிகமாக வந்தது. ஓடிடியில் வந்த பின்புதான் நான் கூலி படம் பார்த்தேன்.
என்னை பொறுத்தவரை ஒரு படத்தை முழுவதுமாக ஒரே அமர்வில் பார்க்க முடிகிறதா என்று பார்ப்பேன். என்னால் கூலி படத்தை ஒரே அமர்வில் பார்க்க முடிந்தது, படத்தைப் பார்த்து முடித்தபின் ஒரே ஒரு கேள்விதான் என்னை நானே கேட்டுக் கொண்டேன். இணையத்தில் வரும் விஷயங்களை அப்படியே நான் ஏற்றுக்கொள்ள பழகி விட்டேனா? ஒரு விமர்சகனாக அந்த படத்தில் 10 குறைகள் கூட கண்டுபிடிக்கலாம். ஆனால் இவர்கள் சொன்ன அளவுக்கு அந்த படம் அவ்வளவு மோசம் இல்லை என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.
