திருச்சி சுடுகாட்டில் எலும்புக்கூடாக எரிந்த பெண் உடல்…. நான்கு திசைகளில் எலுமிச்சம்பழம்…. இரவோடு இரவாக பெண் நரபலியா… திடுக்கிடும் சம்பவம்….!

Spread the love

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வாழ்மால்பாளையம் கீழூர் கிராம சுடுகாட்டில், மனித உடல் முழுவதுமாக எரிந்து எலும்புகள் மட்டுமே எஞ்சியிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி காலை பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார் ஆய்வு மேற்கொண்டபோது, மண்டை ஓடு இல்லாத நிலையில் எலும்புக்கூடுகளும், அருகில் எரிந்த பாசிமாலை, சிவப்பு நிறச் சேலைத் துண்டுகள் மற்றும் புதிய பச்சை நிற மண்பானை ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டன.

இச்சம்பவம் குறித்து திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நடத்திய முதற்கட்ட பரிசோதனையில், கைப்பற்றப்பட்ட எலும்புகள் 20 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்ணுடையதாக இருக்கக்கூடும் என்றும், அவருக்குத் திருமணமாகி குழந்தை பிறந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் முழுமையாக எரிந்துள்ளதால் டிஎன்ஏ பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், பற்கள் மட்டும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் கடந்த நாட்களில் யாரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லாததால், இது கொலையா என்ற கோணத்தில் தீவிர விசாரணை முடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் துப்பு துலக்க திருச்சி சரக டிஐஜி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், ஜீயபுரம் டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படையினர் அப்பகுதியைச் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்வதுடன், திருச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் காணாமல் போன பெண்கள் குறித்த புகார்களைத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, சம்பவ இடத்தில் எலுமிச்சம்பழங்கள் நான்கு திசைகளிலும் வைக்கப்பட்டிருந்தது பொதுமக்களிடையே நரபலி குறித்த அச்சத்தையும், மேலும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சுடுகாட்டில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் யாருடையவை, அப்பெண் எவ்வாறு உயிரிழந்தார் மற்றும் உடல் எரிக்கப்பட்டதற்கான பின்னணி என்ன போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை காண காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடர்கின்றனர். எலுமிச்சம்பழங்கள் யாரால் வைக்கப்பட்டன, இது போலீசாரின் விசாரணையைத் திசைதிருப்பும் செயலா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணங்களிலும் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் வாழ்மால்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

4 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

4 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

4 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

4 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

4 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

4 மணத்தியாலங்கள் ago