“ரூ.3000 கொடு” ரேஷன் கடையில் தவெக நிர்வாகி அட்டகாசம்.. பெண் ஊழியரை மிரட்டி மாமூல் கேட்டு அலப்பறை..!!

Spread the love

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் 1-வது வார்டுக்குட்பட்ட ஜாகிர் பெரிய மோட்டூர் பகுதியில் செயல்படும் ரேஷன் கடையில், தான் ஒரு தமிழக வெற்றிக் கழகம் கட்சி நிர்வாகி எனக் கூறிக்கொண்டு மணிகண்டன் (40) என்ற நபர் மாதாந்திர மாமூலாக 3,000 ரூபாய் கேட்டு அங்கிருந்த பெண் ஊழியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர் அளித்த தகவலின் பேரில், சுற்றியிருந்த பொதுமக்கள் அந்த நபரை கையும் களவுமாகப் பிடித்து மொய்த்துக் கேள்வி எழுப்பினர். பின்னர் அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவியது.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் சேலம் மாவட்டம் புத்தூர் அக்ரஹாரம் பகுதியில் காளியம்மன் கோவில் அருகிலேயே மளிகை கடை நடத்தி வரும் நடிகர் விஜய்யின் தவெக கட்சி நிர்வாகி மணிகண்டன் என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், இந்த மாமூல் விவகாரத்தில் மேலிட உத்தரவு மற்றும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக அவர் மீது காவல்துறை தரப்பில் உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

3 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

3 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

4 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

4 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

4 மணத்தியாலங்கள் ago