“தினமும் பாலியல் கொடுமை… வேதனையா இருக்கு..!” – சேலம் விவகாரத்தில் தமிழக அரசை அதிரவைத்த CPI வீரபாண்டியின் அறிக்கை…!!

Spread the love

தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை குற்றச் செயல்கள் பெரும் வேதனையளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. குறிப்பாக, சேலம் மாநகரின் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (40) என்பவர், வறுமையில் உள்ள பெண்களுக்கு கடன் தருவதாக ஏமாற்றி, பாலியல் வணிகத்தில் ஈடுபடுத்திய கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஏமாற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. குற்றவாளியான மணிகண்டன் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள மணிகண்டனின் அரசியல் பின்னணி குறித்து காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி, அதன் விபரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. மேலும், தமிழகத்தில் புதிய ஆட்சி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் அமைத்துள்ள “சிங்கப்பெண் சிறப்புப் படை”யின் பணிகளை முழுவீச்சில் விரிவுபடுத்த வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்தக் கொடூரச் செயலில் மணிகண்டன் ஒருவரை மட்டுமே குற்றவாளி என்று கூறி விசாரணையின் எல்லையைச் சுருக்கிவிடக் கூடாது என அறிக்கை வாயிலாக வலியுறுத்தப்பட்டுள்ளது. நீண்டகாலமாக நடந்து வந்த இந்த குற்றச்செயல் காவல்துறையினருக்குத் தெரியாமல் இருந்திருக்க முடியாது என்ற ஆழ்ந்த சந்தேகம் எழுவதால், அவருக்குப் பின்பலமாக இருந்தவர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். எனவே, இந்த வழக்கில் நேர்மையான விசாரணை நடைபெற ஏதுவாக, இதனை உடனடியாக சிபிசிஐடி பிரிவுக்கு மாற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் வீரபாண்டி தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

Swetha

Recent Posts

யார் இந்த நவாப் கான்?… காரில் தொங்கியபடி சென்ற நபர்… கரும்பு தோட்டத்தில் பிணமாக மீட்கப்பட்ட வாலிபர்… CCTV-ல் சிக்கிய கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நவாப் கான் என்ற நபர் பட்டப்பகலில் மர்மக் கும்பலால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

6 minutes ago

அடக்கொடுமையே!… முதல் கணவர் உயிரோட தான் இருக்காரா?… நள்ளிரவில் காணாமல் போன புதுப்பெண்… போலீஸ் விசாரணையில் வெடித்த பகீர் உண்மை…!!

உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் என்பவருக்கு அண்மையில் மறுமணம் நடைபெற்றது. ஆனால், முதலிரவன்றே தனது மனைவி…

13 minutes ago

ஐயோ… கடைசி மூச்சு வரை பாம்பு பிடிப்பேன்… 5000 விஷப் பாம்புகளுடன் மோதும்… பெண்ணின் மிரள வைக்கும் சாகசம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜீ தமிழ் தொலைக்காட்சி விவாதங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள மற்றொரு நிகழ்ச்சி 'தமிழா தமிழா'. ஊடகவியலாளர் ஆவுடையப்பன் அவர்களின் நெறியாளுமையில்…

15 minutes ago

நெஞ்சே நின்னு போச்சு..! இன்னோவா செய்த வெறிச்செயல்… எமன் வாயிலிருந்து தப்பிய பைக் ரைடர்… பதறவைக்கும் சிசிடிவி…!!

கேரள மாநிலம் காளிக்காவில் நிகழ்ந்த இந்த நெஞ்சை உறையவைக்கும் காட்சி, சாலைப் பாதுகாப்பின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை ஆழமாக உணர்த்துகிறது.…

22 minutes ago

அதிர்ச்சி… ஈரானை அழிக்கத் தயார்… இந்த வார இறுதியில் நடக்கும் பயங்கரம்?… டொனால்ட் டிரம்பின் அதிரடி எச்சரிக்கை…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது மற்றொரு சிறிய அளவிலான 'எபிக் ப்யூரி' ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடும் என்று…

25 minutes ago

அம்மாடியோ… அப்பாவைப் போலவே மகன்… சல்லானி ஜுவல்லரியின் புதிய முகமானார் ஜேசன் சஞ்சய்… ரசிகர்கள் உற்சாகம்…!

தமிழ் சினிமாவின் இயக்குநர் ஜேசன் சஞ்சய், பிரபல சொகுசு நகை நிறுவனமான 'சல்லானி ஜுவல்லரி மார்ட்' -ன் புதிய பிராண்ட்…

31 minutes ago