தமிழகம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம் என்று CPM மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் ஜாதி மறுப்பு திருமணங்களுக்காக தடைப்பட்ட ஏற்பாடுகள் இல்லை என சாடிய அவர், காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் அலுவலகங்கள் 24 மணி நேரமும் திறந்தே இருக்கும் என தெரிவித்துள்ளார். சாதி ஆணவக் கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
